உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகள் உள்பட 1186 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகள் உள்பட 1186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவுகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 500-ஐ கடந்திருந்தது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்தது.
இதையடுத்து கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. களப்பணியாளர்கள் மூலமாகவும் சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் 5944 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 1186 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
குமரிமாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட 1186 பேரில் 583 பேர் ஆண்கள் 603 பேர் பெண்கள் ஆவர். இதில் 60 குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லையில்இருந்து வந்த 4 பேரும், கேரளாவில் இருந்து வந்த 5 பேருக்கும், தூத்துக்குடியில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரில் தினசரி பாதிப்பு கடந்த ஒரு வாரமாக 200ஐ கடந்து இருந்த நிலையில் இன்றும் 260 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிராமப்புறங்களிலும் பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது. தோவாளை தாலுகா பகுதியில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.
அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 99 பேருக்கும், கிள் ளியூர் தாலுகாவில் 97பேரும், குருந்தன் கோட்டில் 88 பேரும், மேல்புறத்தில் 47 பேரும், முன்சிறையில் 102 பேரும், ராஜாக்கமங்கலத்தில்97 பேரும், திருவட்டாரில் 119 பேரும், தக்கலையில் 75 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டி லேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் குறைவான நபர்கள் சிகிச்சையில் உள்ள னர். தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்கள் பாதிப்பு அதிகம் இருப்பின் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் இதுவரை 60க்கு மேற்பட்ட போலீசாரும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கியில் பணியாற்றும் 25-க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையில் வேலை பார்க்கும் 34 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
நாகர்கோவிலில் உள்ள மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.