உள்ளூர் செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட ஜவுளிக்கடை புகைமண்டலமாக காட்சி அளிப்பதையும், பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்ப்பதையும் படத்தி

தருமபுரி துணிக்கடையில் திடீர் தீ விபத்து

Published On 2022-01-20 15:40 IST   |   Update On 2022-01-20 15:40:00 IST
தருமபுரி பஸ் நிலையம் அருகே உள்ள துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட் டது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
தருமபுரி:

தருமபுரி பஸ் நிலையம் அருகே உள்ள அப்துல் முஜிப் தெருவில் தனியார் மொத்த ஜவுளி கடை இயங்கி வருகிறது.  

இந்த கடையின் உரிமையாளர் நேற்று  மாலை 6 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு 7.30 மணி அளவில் திடீரென கடைக்குள் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடையின் பூட்டுகளை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த திடீர் தீ விபத்து காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையி னருக்கு நவீன கருவிகள் இல்லாததால் பூட்டை சுத்தியலால் உடைத்து கடையை திறப்பதில்  தாமதம் ஏற்பட்டது. 

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தீயணைப்பு துறை ஊழியர்களிடம் பவர்புல் டார்ச்லைட் இல்லாததால் இருட்டிலேயே  பணியாற்றிய தாலும், புகையில் செல்ல கவச உடையும் அணியாமல் சென்றதாலும் ஊழியர்களுக்கு தீயை அணைப்பதில் கால தாமதமும், சிரமமும் ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News