உள்ளூர் செய்திகள்
ஆதி மாரியம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-02-27 07:10 GMT   |   Update On 2022-02-27 07:10 GMT
இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி:

திருச்சி  மாவட்டம்  சமயபுரம் மாரியம்மன்    கோயிலின் உபகோயிலான   இனாம் சமயபுரம்  ஆதிமாரியம்மன் கோவில்  திருவிழாவில் இன்று தேரோட்டம்  நடை பெற்றது. 

இதனையொட்டி கடந்த 21-ந்தேதி சிறப்பு அபிசேக ஆராதனைகளுடம் திருவிழா தொடங்கபட்டது. அன்று முதல் தொடர்ந்து கேடயம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிசபவாகனம், அன்ன வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடை பெற்றது. இதனையொட்டி  மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடை பெற்றது.  

பின்னர் அம்மன்  தேரில் எழுந்தருளி 9.30 மணிக்கு திருத்தேர்  வடம்  பிடிக்கப்பட்டது. திரளான  பக்தர்கள் தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்றனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள்  மற்றும் ஊழியர்கள்  செய்திருந்தனர்.

Similar News