உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மலை மீது ஏறி போராட்டம் நடத்திய 16 பேர் மீது வழக்கு

Published On 2022-02-27 09:00 GMT   |   Update On 2022-02-27 09:00 GMT
குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மலை மீது ஏறி போராட்டம் நடத்திய 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா அரியூர் கிராமத்தில் ஒருவர் குவாரி குத்தகைக்கான உரிமம் பெற்றுள்ளார்.

இதையடுத்து அங்கு கல் எடுப்பதற்காக  அவர் உரிய அனுமதி சீட்டுடன் மண் அகற்றும் பணியை செய்து வந்துள்ளார்.  

இந்நிலையில் அரியூர் கிராமம் மற்றும் அருகில் உள்ள சங்கரன் கோவில் வட்டத்திற்குட்பட்ட இருமன்குளம், வடக்கு புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முறையாக குவாரி நடத்தவில்லை எனவும், குவாரியால் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும் கூறி  நேற்று திடீரென அரியூர் மலை மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

உடனே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து துறை அலுவலர்களும் மீண்டும் ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக புளியங்குடி போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 16 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News