உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை:
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி இன்று ஞாயிற்றுக்கிழமை ராணிப்பேட்டை முத்துக்கடையொ 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரத்து 880 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த முகமானது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்த 800 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப் பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
இதனை தொடர்ந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் புதிய வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போலியோ சொட்டு மருந்து முகாமானது தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச் சாவடிகளிலும், அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப் பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் மேம்பால பணியாளர்கள் சாலை வி£¤வாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பொம்மை விற்பனையாளர்கள், இலங்கை தமிழர்கள் அடியவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உட்பட 2,795 பணியாளர்களும் 99 மேப்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகளை எடுத்துச் சொல்வதற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 45 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.