உள்ளூர் செய்திகள்
கொரோனா இல்லாத மாநிலமான புதுச்சேரி
மக்களை பாடாய்ப்படுத்தி வந்த கொரோனா தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி கொரோனா இல்லாத மாநிலமானது.
புதுச்சேரி:
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்தியாவிலும் புகுந்ததால் அந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த தொற்று புதுவையிலும் கண்டறியப்பட்டது. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என புதுவை மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
மக்களை பாடாய்ப்படுத்தி வந்த கொரோனா தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்து வந்தது. நேற்று ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தநிலையை புதுச்சேரி எட்டியுள்ளது.
அதாவது நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர்கூட தொற்றினால் பாதிக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 25 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 11 பேர் குணமடைந்தனர். புதுவையில் குணமடைவது 98.80 சதவீதமாக உள்ளது.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 21 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 94 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 6 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 96 ஆயிரத்து 951 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியின் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்போடு மற்ற துறைகளை சார்ந்த ஊழியர்கள், தன்னார்வல தொண்டர்கள் அனைவரும், சுகாதாரத்துறையினருடன் இணைந்து இரவு பகல் பார்க்காமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டும் தடுப்பூசி செலுத்துவதில் ஊக்கப்படுத்தியதால் மக்களின் ஒத்துழைப்போடு இப்போது கொரோனா தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலை தொடர புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா தடுப்பு முறைகளான முககவசம் அணிதல், கை சுத்தம் பேணுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், முதல், 2-ம், 3-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்ற அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.