உள்ளூர் செய்திகள்
போடியில் பைக் கொள்ளையர் அட்டகாசம்
போடியில் தொடர்ந்து பைக் கொள்ளையர் கைவரிசை காட்டி வருவதால் மககள் தவித்து வருகின்றனர்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த ஒரு மாத காலமாக சுமார் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது.
பெரும்பாலான வீடுகளில் வாசலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் இரவில் திருடப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தாலும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும், நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக போடி நகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள நூலகம் அருகிலேயே இருசக்கர வாகனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருடு போனது. இதுவரை திருடுபோன வாகனம் மீட்கப்படவில்லை. குற்றவாளிகளும் பிடிபடவில்லை.
போடியின் முக்கிய பகுதியான வ.உ.சி. நகர், டி.வி.கே.கே நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போய் உள்ளன. இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தாலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்படவில்லை என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே கண்காணிப்பு கேமராவில் ஒரு மர்ம நபர் டவுசருடன் இரவில் சுற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை வைத்தாவது பைக் திருடர்களை போலீசார் பிடிப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.