உள்ளூர் செய்திகள்
சென்னையில் கோழிக்கறி விலை கிலோ ரூ.300 நெருங்கியது
சென்னையில் கடந்த மாதத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக விலை உயர்ந்தது.
சென்னை:
தமிழகத்தில் கறிக்கோழி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. உயிருடன் விற்கப்படும் கறிக்கோழி விலையை பண்ணையாளர்கள் நிர்ணயிக்கிறார்கள்.
அதன்விலை கடந்த மாதம் கிலோ ரூ.110, ரூ.120 ஆக இருந்தது. தற்போது ரூ.153 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த மாதத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக விலை உயர்ந்தது. கடந்தவாரம் ரூ.250-க்கு விற்கப்பட்ட கறிக்கோழி இன்று ரூ.280 ஆக அதிகரித்தது. இது மேலும் அதிகரிக்கும் என்று கோழிக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மூலக்கடை எஸ்.ஆர்.தேவர் சிக்கன்கடை உரிமையாளர் ராமநாதன் கூறியதாவது:-
கடந்த மாதம் வரை கறிக்கோழி விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வழக்கமாக இந்த காலத்தில் கறிக்கோழி விற்பனை மந்தமாக இருக்கும். கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியிருப்பதால் பெரும்பாலும் அசைவ உணவை தவிர்ப்பார்கள். அதனால் விற்பனை குறைவாக இருக்கும். விலையும் குறையத்தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக விலை உயர்ந்து வருகிறது. தற்போது கறிக்கோழி கிலோ ரூ.280-க்கு விற்கப்படுகிறது. இது ரூ.300 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
பண்ணையாளர்கள் கறிக்கோழி உற்பத்தியை குறைத்து விட்டதே இதற்கு காரணம். கோழித்தீவணமான மக்காச்சோளம், சோயா போன்றவற்றின் விலை உயர்வால் பண்ணையாளர்கள் இந்த முடிவை மேற்கொண்டதால் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.