உள்ளூர் செய்திகள்
.

ராசிபுரத்தில் ரூ.95 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2022-03-08 15:27 IST   |   Update On 2022-03-08 15:27:00 IST
ராசிபுரத்தில் ரூ.95 லட்சத்துக்கு 2 ஆயிரத்து 975 மூட்டை பருத்தி ஏலம் போனது.

ராசிபுரம்:

ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

ஆர்.சி.எச். ரக பருத்தி 2 ஆயிரத்து 816 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 112 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 47 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து699-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 471-க்கும், 

டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 840-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 419-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 950-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும் ஏலம் போனது.

மொத்தம் 2 ஆயிரத்து 975 மூட்டை பருத்தி ரூ.95 லட்சத்திற்கு விற்பனையானது.

Similar News