உள்ளூர் செய்திகள்
மகாராஜா கடை அருகே டெம்போ மோதி தொழிலாளி சாவு
தருமபுரி மாவட்டம், மகாராஜா கடை அருகே டெம்போ மோதி தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது33). நண்பர் பூமாலை (30) ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள குவாரியில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியில் இருந்து குப்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது படையதலா ஏரி அருகே பாலத்தில் வந்த போது எதிரே வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மகாராஜாகடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.