உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-07 14:16 IST   |   Update On 2022-04-07 14:16:00 IST
பெட்ரோல், டீசல், கியாஸ் விலைஉயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டத்தலைவருமான சுப்புராமன் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஆசிரியர்  தமிழ்ச்செல்வன், மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.  

ஆர்ப்பாட்டத்தில் வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் மற்றும் மாநில துணைத்தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News