உள்ளூர் செய்திகள்
மளிகை கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை
சாம்பவர்வடகரை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாம்பவர்வடகரை:
சாம்பவர்வடகரை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வேலை பார்த்து வந்த சிவா கொரோனாவுக்கு பின்னர் சொந்த ஊருக்கு வந்து மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவா மளிகை கடை வைப்பதற்காக கடன் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளச்சலில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.