உள்ளூர் செய்திகள்
மலைப்பகுதியில் தீயை வனத்துறையினர் அணைத்த காட்சி.

கடையம் அருகே மலையில் காட்டுத்தீ

Published On 2022-04-07 15:09 IST   |   Update On 2022-04-07 15:09:00 IST
கடையம் வன சரக எல்லைக்கு உட்பட்ட கடையம் பீட் கண்ணிமாரம்மன் கோவில்‌ உச்சிப் பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கடையம்:

கடையம் வன சரக எல்லைக்கு உட்பட்ட கடையம் பீட் கண்ணிமாரம்மன் கோவில்‌ உச்சிப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது சம்பந்தமாக கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இதைத் தொடர்ந்து துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி, களப்பணியாளர்கள் மற்றும் கூலி ஆட்கள் 4 தனி குழுவாக புறப்பட்டு காய்ந்த புற்களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டனர்.

சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

Similar News