உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

3 ரெயில்களின் இயக்கம் மாற்றம்

Published On 2022-04-07 15:47 IST   |   Update On 2022-04-07 15:47:00 IST
கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு கடந்து சேலம் செல்லும்.
திருப்பூர்:

நாளை 8-ந்தேதி 3 ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி  ஓமலூர் - மேட்டூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி துவங்கவுள்ளது. அன்று 3 ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12677) வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக சேலம் வந்து சேரும். இதனால் ஓசூர், தர்மபுரிக்கு ரெயில் செல்லாது. மறுமார்க்கமாக செல்லும் போதும் மேற்கண்டவாறே இயக்கப்படும்.

கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (11014) கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு கடந்து சேலம் செல்லும். அங்கிருந்து குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்று மறுநாள் மும்பை சென்றடையும். இந்த ரெயிலும் தர்மபுரி, ஓசூர் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Similar News