உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கிராம சபை கூட்ட பயிற்சி
ஆலங்குளம் தனியார் மண்டபத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கிராம சபை கூட்ட பயிற்சி நடைபெற்றது.
ஆலங்குளம்:
மே 1-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கிராம சபை கூட்ட பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, பழனிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் ஆகியோர் கிராம சபைக் கூட்டம் தொடர்பான பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் அனைத்து ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை திட்ட மேலாளர் சுப்பையா செய்திருந்தார்.