உள்ளூர் செய்திகள்
சங்கீதா.

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2022-04-29 10:18 GMT   |   Update On 2022-04-29 10:18 GMT
நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரல் வாழவல்லான்பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி உலகம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகளும் உள்ளனர்.

 இதில் 3-வது மகள் சங்கீதா (27) ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

அப்போது பக்கத்து ஊரான கோட்டுபுள்ளா ம்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2015-ம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவிற்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சங்கீதாவை வேல்முருகன் அடிக்கடி சந்தேகப்பட்டு பேசி வந்துள்ளார். இதனால் 4 வருடத்திற்கு முன்பு சங்கீதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

பின்னர் அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் சங்கீதாவின் மாமியார் ஈஸ்வரியும் மற்றும் கணவர் வேல்முருகன் ஆகியோர் சங்கீதாவை திட்டி வந்துள்ளனர். 

இதுகுறித்து சங்கீதா தனது தாயிடம் போனில் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வேல்முருகன் தனது மாமியாருக்கு போன் செய்து உங்களது மகள் தூக்கு போட்டு கொண்டார். 

கோபி அரசு மருத்துவமனையில் அவரது உடல் உள்ளது என்று கூறிஉள்ளார். இதையடுத்து உலகம்மாள் பதறியடித்துக்கொண்டு கோபி அரசு மருத்துவ மனையில் சென்று தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து அவர் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன்பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

Similar News