உள்ளூர் செய்திகள்
26 ரேசன் கடைகளில் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பு
- ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
- இதனை தொடர்ந்து, 26 அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்:
ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 10 கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று ஆத்தூர் டவுன், மகுடஞ்சாவடி பகுதிகளில் செயல்படும் 28 ரேசன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் 26 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.