வைகை அணையில் மீன்குஞ்சுகள் விடப்பட்ட காட்சி.
மீன் வளத்தை பெருக்க வைகை அணையில் 3 லட்சம் மீன்குஞ்சுகள்
- வைகை அணையில் மீன் வளத்தை பெருக்க 16 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- முதற்கட்டமாக 3 லட்சம் குஞ்சுகள் வைகை நீர்த்தேக்கத்தில் விடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணையில் மீன் வளத்தை பெருக்க 16 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அணையில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்வளத்துறை சார்பில் நடைபெறும் இந்த மீன்பிடி தொழிலில் வைகை அணையை சுற்றியுள்ள 140க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.
ஒரு நாளைக்கு 500 முதல் 700 கிலோ அளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயற்கையான முறையில் வளரும் வைகை அணை மீன்களுக்கு பொது மக்களி டையே அதிக வரவேற்பு இருக்கும்.
இதன் காரணமாக மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீன் வளத்துறை சார்பில் வைகை அணை நீர்த்தேக்கத்தில் புதிதாக மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படும்.
இந்தாண்டு வைகை அணையில் புதிதாக 16 லட்சம் மீன்குஞ்சுகளை விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வைகை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டதொட்டி களில் 9 லட்சம் நுண்மீன்கு ஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த சுமார் 3 லட்சம் குஞ்சுகள் வைகை நீர்த்தேக்கத்தில் விடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப்பணியை மதுரை மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா மற்றும் மீன்வளர்ப்புத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.