உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
- கிணறு வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த மதி என்பவரிடம் ஒப்பந்தம் செய்தார்.
- ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ராஜபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது68) விவசாயி. இவர் தனது நிலத்தில் புதியதாக கிணறு வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த மதி(58) என்பவரிடம் ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில் கிணறு வெட்டும் பணியை மதி காலதாமதம் செய்ததால், கிணறு வெட்டும் பணியை மாரி வேறு நபருக்கு கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதி குடும்பத்தினர் மாரியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதி, மற்றும் அவரது மகன்கள் அஜித்(32), வல்லரசு(20) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.