தேனி அருகே வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
- வேலை இல்லாமல், மனஉளைச்சலுக்கு ஆளானவர் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாலும் தற்கொலை செய்துகொண்டனர்.
தேனி:
தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜராஜன். இவர் எம்.இ., படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். சரியான வேலை அமையவில்லை. இதனால் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பத்தை சேர்ந்தவர் ரமேஷ்(25). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கூலித்தொழி லாளியான அவர் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் தனியாக வசித்து வந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்லும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடலூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் வனராஜா(47). மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் விஷமருந்தி மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.