உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு பட்டாவை ஆர்.டி.ஓ. பிரேம் குமார் வழங்கினார்


நிலக்கோட்டை ஜமாபந்தியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு பட்டா

Published On 2022-06-10 11:32 IST   |   Update On 2022-06-10 11:32:00 IST
  • நிலக்கோட்டை தாலு காவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு ஜமா பந்தி நடைபெற்றது
  • உடனடியாக 30 பேருக்கும் பட்டா வழங்க ஆர்.டி.ஓ உத்தரவிட்டார்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலு காவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு ஜமா பந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் 40 கிராம ஊராட்சி மக்களிடம் இருந்து பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா செய்தல், வீட்டுமனை பட்டா, அடங்கல் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 732 மனுக்கள் வரப்பெற்றது. 6 நாட்களில் 172 பேருக்கு நத்தம் வீட்டுமனை பட்டா, முழு புல நிலப்பட்டா வழங்க ப்பட்டது.

இந்த ஜமாபந்தியில் நிலக்கோட்டை பேரூரா ட்சிக்குட்பட்ட என். புதுப்பட்டியைச் சேர்ந்த பழங்குடி இன கிராம மக்கள் 30 பேர் உட்பிரிவு செய்து பட்டா கேட்டு இருந்தனர். உடனடியாக 30 பேருக்கும் பட்டா வழங்க ஆர்.டி.ஓ உத்தரவிட்டார்.

இதனை ஏற்று நிலக்கோட்டை நில அளவையர் 8 நாட்களில் 30 பேருக்கும் வரைபடம் வரைந்து உட்பிரிவு செய்து பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களுக்கு ஆர்.டி.ஓ பிரேம்குமார் அதற்கான ஆணையை வழங்கினார்.

இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News