உள்ளூர் செய்திகள்

முதல் புத்தக திருவிழா நிறைவு விழாவில் கலெக்டர் ஷஜீவனா சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

தேனி புத்தக திருவிழா மூலம் 4394 புத்தகங்கள் சிறைத்துறைக்கு நன்கொடை கலெக்டர் ஷஜீவனா தகவல்

Published On 2023-03-14 11:13 IST   |   Update On 2023-03-14 11:13:00 IST
  • தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகதிருவிழா மார்ச் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடத்தப்பட்டது.
  • 11-ம் நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது.

தேனி:

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகதிருவிழா மார்ச் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடத்தப்பட்டது. 11-ம் நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதுகுறித்து கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், புத்தக திருவிழா தொடங்க ப்பட்டு இன்றைய தினம் வரை 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த 50 புத்தக அரங்குகளின் மூலம் ரூ.81.06 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.22500 மதிப்பிலான 4394 புத்தகங்கள் சிறைத்துறைக்கு நன்கொடையாக வழங்க ப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலுகின்ற 11500 மாணவ-மாணவி களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News