உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ரூ.450 வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2022-11-04 09:40 IST   |   Update On 2022-11-04 09:40:00 IST
  • வாலிபரை பட்டா கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்து ரூ.450ஐ பறித்து சென்ற வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது.
  • தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தேனி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பாண்டீஸ்வரி காம்பவுண்டைச் சேர்ந்த முத்துவீரன் மகன் ரமேஷ்குமார் (வயது 37). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தேனி பங்களா மேடு பகுதியில் சோலைத் தேவன் பட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் மணி என்பவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வம் என்ற சூப் செல்வம் (31) என்பவர் ரமேஷ் குமாரை வழிமறித்து அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.450ஐ பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.

ரமேஷ்குமார் சத்தம் போட்டபோது அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே பட்டா கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் வழிப்பறி செய்த செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News