உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கபட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் மீது வழக்கு

Published On 2023-04-22 10:14 GMT   |   Update On 2023-04-22 10:14 GMT
  • அங்கு குச்சிகள் உடைந்த நிலையில், ஆடைகளுடன் அங்கு வந்த மர்ம நபருடைய ஆதார் கார்டுகளும் இருந்தது.
  • பெண்ணின் தாயார் எனது மகளை கோபால் மற்றும் சின்னராஜ் ஆகிய இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது40). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கணவனை பிரிந்து தன்னுடைய தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று காலை மரவள்ளி கிழங்கு தோட்டத்திற்கு காலைக்கடன் கழிப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய செல்வி புடவை இல்லாமல் அலங்கோலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதில் சந்தேகமடைந்த இவரது தாய் மரவள்ளி கிழங்கு தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு குச்சிகள் உடைந்த நிலையில், ஆடைகளுடன் அங்கு வந்த மர்ம நபருடைய ஆதார் கார்டுகளும் இருந்தது.

அந்த ஆதார் கார்டை எடுத்து பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் சின்னராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெண்ணின் தாயார் எனது மகளை கோபால் மற்றும் சின்னராஜ் ஆகிய இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News