கொள்ளிடத்தில் கண்ணாடிவிரியன் பாம்பு பிடிபட்டது
- கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.
- அந்த கட்டத்தின் அருகில் ஒரு பாம்பு இருந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.
இதில் மகளிர் திட்ட வாழ்வாதார இயக்கம் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இக்கட்டிடத்தின் பின்பகுதியில் சுவரையொட்டி ஒரு பாம்பு படுத்து கிடந்ததை பார்த்து அங்குள்ள அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்ததன் பேரில், சீர்காழியை சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பாம்பு ஓடிவிட்டது.
அந்த பாம்பை பாண்டியன் சுமார் 2 மணி நேரம் தேடி கண்டுபிடித்து அதனை லாவகமாக பிடித்தார்.
பின்னர் பிடிபட்ட பாம்பு கண்ணாடி விரியன் பாம்பு என்று அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பிடிபட்ட பாம்பு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியி டம் ஒப்படைக்கப்பட்டு, சீர்காழி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.