திருநாவலூர் அருகே லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளான சொகுசு பஸ்
- பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது.
- காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
சென்னையிலிருந்து, ராமநாதபுரத்திற்கு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை ராமநாதபுரத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து, டிரைவர் மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்சில் முன்பக்கம் அமர்ந்திருந்த ஒரு சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
விபத்து நடந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 108 ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பஸ்சில் வந்த பயணிகளை, மாற்று பஸ்சில் ஏற்றி ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.