கோட்டக்குப்பம் அருகே தனியார் விடுதியில் பணியாற்றிய நேபாள வாலிபர் தற்கொலை
- நவீன் தந்திராயன்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி செய்து வந்தார்.
- சந்தே கமடைந்த ஊழியர்கள், விடுதி உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில், கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளிவில் வந்து செல்வார்கள். இவர்கள் தங்கி இப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக இங்கு தனியார் தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்த நவீன் (வயது 20) என்பவர் தந்திராயன்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி செய்து வந்தார். இவர் அங்குள்ள அறையிலேேய தங்கி பணியாற்றினார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு அவரது அறைக்கு சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும், அவர் வெளியில் வரவில்லை.
இதனால் சந்தே கமடைந்த ஊழியர்கள், விடுதி உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்த ர்ராஜன் தலைமையிலான போலீசார், விடுதி அறைக்குள் சென்றனர். அங்கு நவீன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் தொங்கினார்.நேபாள இளைஞர் நவீனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கும் நவீனின் பெற்றோருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.