உள்ளூர் செய்திகள்
பகண்டைகூட்டுரோடு அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் மதுபாட்டில் விற்று கொண்டிருந்த நாகல்குடி காலனியை சேர்ந்த பீமன் (வயது56) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.