உள்ளூர் செய்திகள்
எண்ணை பாக்கெட் ஏற்றிவந்த வேன் மேம்பாலத்தில் கவிழ்ந்தது
- 3 டன் எடையுள்ள எண்ணை பாக்கெட்டுகள் சாலையில் சிதறி கிடந்தன.
- வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆரூணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருவொற்றியூர்:
பெரியபாளையத்தில் இருந்து மயிலாப்பூருக்கு தனியார் கம்பெனி வேனில் சமையல் எண்ணை பாக்கெட்டை ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலத்தில் செல்லும் பொழுது வேன் பழுதடைந்து திடீரென்று ஸ்டான்லி மருத்துவமனை அருகே மேம்பாலத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
அதில் ஏற்றிக் கொண்டு வந்த 3 டன் எடையுள்ள எண்ணை பாக்கெட்டுகள் சாலையில் சிதறி கிடந்தன. வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆரூணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போக்குவரத்து போலீசார் கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.