உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே பணம் திருடிய வாலிபர் கைது
- போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்.இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், இளங்கோவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் கண்டாச்சிபுரம் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி(20) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான சென்னையை சேர்ந்த பால்ராஜ் உள்பட 2 பேருடன் சேர்ந்து வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்த மெல்கியோர் (68) என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூபாய் 4 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார்கைது செய்தனர். மேலும் பால்ராஜ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.