கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
- பரோலில் வெளிவந்த குருமூர்த்தி கடலூர் மத்திய சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை.
- மணல்மேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 52).
இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேட்ட பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் நண்பர் மதியழகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்த குருமூர்த்தி கடலூர் மத்திய சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை. தொடர்ந்து 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குருமூர்த்தியை உளவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை டிஎஸ்பி. சஞ்சீவ்குமார் தலைமையில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, தனிப்பிரிவு பாஸ்கர் ஆகியோர் அடங்கிய போலீசார் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் குருமூர்த்தி மணல்மேடு போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.