விழுப்புரம் அருகே அதிரடி: குட்கா கடத்த முயன்ற அண்ணன்- தம்பிகள் கைது
- விழுப்புரம் அருகே குட்கா கடத்த முயன்ற அண்ணன்- தம்பிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
- சப்- இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்து கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்திற்கு பேருந்துகள் மற்றும் மினி லாரிகள்,போக்குவரத்து லாரிகள் இரண்டு சக்கர வாகனம் மூலம் குட்கா கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் போலீசார் கடைவீதியில் உள்ள பெட்டி கடைகளிலும் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது பல இடங்களில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் கண்டாச்சிபுரம் ஒரத்தூர் சாலையில் சப்- இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்து கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். அதில் குட்கா, புகையிலை பொருட்கள் ஏற்றி வந்தனர். விசாரணையில் மணிகண்டன், அவரது சகோதரர்கள் மூர்த்தி, கார்த்திக் என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்என தெரியவந்தது.தெரியவந்தது.