தார் கலவை ஆலைக்கு சீல் வைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு
- அரசு விதிமுறைகளை பின்பற்றி ஆலைக்கான சான்று பொறியாளரிடம் கொடுத்திருந்தது .
- ஏற்கனவே வாங்கிய லஞ்ச பணத்தை மீட்டுக் கொடுக்கவும், எங்களது நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம், சுக்கம்பாளையம் கிராமம்ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தார் கலவை ஆலை மேலாளர் அபுதாஹிர் மற்றும் அலுவலர்கள் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-
நாங்கள் மேற்படி முகவரியில் செயல்படும் தார் சாலை அமைக்கும் கலவை உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறோம்.
இதனிடையே எங்களது தார் கலவை நிறுவனத்திற்கு உரிமையாளர் பெயரில் குத்தகை ஒப்பந்தம், டிமாண்ட் ட்ராப்ட், சொத்து மதிப்பு ஆவணங்கள் மற்றும் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஆலைக்கான சான்று பொறியாளரிடம் கொடுத்திருந்தேன்.
மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில் செலவினங்களுக்கு கட்டாயப்படுத்தியதன் பேரில் 6 தவணைகளில் இதுவரை அலுவலர்களுக்கு சுமார் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். அனுமதி வழங்கிட மேலும் ரூ. 10 லட்சம் கேட்டனர். பணம் தருவதற்குள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மற்றும் வட்டாட்சியர், வருவாய் துறையினர் உட்பட 10 பேர் ஆலையில் உள்ளஎந்திரங்கள் ஆகியவற்றிற்கு பூட்டு போட்டு சீல் வைத்து சென்றுவிட்டனர். எங்களிடம் ஏற்கனவே வாங்கிய லஞ்ச பணத்தை மீட்டுக் கொடுக்கவும், எங்களது நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.