உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் ரூ.2½ லட்சம் உண்டியல் வசூல்

Published On 2022-06-07 08:01 GMT   |   Update On 2022-06-07 08:01 GMT
  • காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
  • பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 ரொக்கமாக கிடைத்தது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற ஆதிகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நிரம்பின.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் திறக்கப்பட்டது.

கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 ரொக்கமாக கிடைத்தது. மேலும் 50 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News