உள்ளூர் செய்திகள்
கல்பாக்கத்தில் கலப்பட பெட்ரோலா? பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்
- பெட்ரோலில் தண்ணீர் உள்ளதாக மெக்கானிக் கூறியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்
- விசாரணை நடத்திய கல்பாக்கம் போலீசார் பெட்ரோலை சோதனைக்கு எடுத்து சென்றனர்
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இன்று காலை அங்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சென்ற இருசக்கர வாகனங்கள் பாதி வழியில் நின்றது. உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக் கடையில் வண்டியை சோதனை செய்ததில் பெட்ரோலில் தண்ணீர் உள்ளதாக மெக்கானிக் கூறியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வாகனத்தை தள்ளிக்கொண்டு அனைவரும் பெட்ரோல் பங்க் சென்று ஊழியரிடம் வாக்குவாதம் செய்து பங்கை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கல்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பெட்ரோலை சோதனைக்கு எடுத்துக் கொண்டு, அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பெட்ரோல் விநியோகத்தை நிறுத்த சொல்லி அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.