உள்ளூர் செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் பதவி நியமன சான்றிதழை முத்துக்குமாரிடம் வழங்கிய காட்சி.

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி ஜெ.பேரவை இணைச்செயலாளராக வக்கீல் முத்துக்குமார் நியமனம்

Published On 2022-10-07 09:07 GMT   |   Update On 2022-10-07 09:07 GMT
  • அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் வக்கீல் முத்துக்குமார்.
  • பாளையங்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.

நெல்லை:

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக பாளையங்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவர் வக்கீல் முத்துக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் வக்கீல் முத்துக்குமார். இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். இந்த கூட்டுறவு சங்கம் கடனில் இருந்ததை தற்போது கடன் இல்லாத சங்கமாக முத்துக்குமார் மாற்றி உள்ளார். மேலும் நிரந்தர வைப்பு தொகை மற்றும் நகை கடன் என சுமார் 20 ஆயிரம் பயனாளிகள் இச்சங்கத்தில் உள்ளனர். மாணவர் பருவத்தில் இருந்தே அ.தி.மு.கவில் இருந்து வரும் முத்துக்குமார் தற்போது மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News