உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் தண்ணீர் பந்தல்
- இளம்பெண்கள் பாசறை சார்பில், நேற்று தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
- பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், நேற்று தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
ஓசூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.
இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.
இதில், மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, ராஜி, , மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சாச்சு என்ற அயாஸ்கான், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.