உள்ளூர் செய்திகள்
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் தென்பெண்ணை ஆற்றில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு -கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
- கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிந்த போதும், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அணைக்கு நேற்று முன்தினம், 3,070 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், 1,700 கன அடியாக நீர்வரத்து நேற்று காலை சரிந்தது. அணையில், 44.28 அடிக்கு, 40.02 அடிக்கு நீர் உள்ளது.
இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல் ஆற்றில், ரசாயன நுரையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.