உள்ளூர் செய்திகள்
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி கொடியேற்றினார்.
தஞ்சையில் அ.ம.மு.க. கொடியேற்று விழா
- டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.
- மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேலவஸ்தா சாவடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியேற்று விழா நடந்தது.
இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகள், லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவும், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும் தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது.
மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வை ஆட்சியில் அமர செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.