உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்ட காட்சி.

கடத்தூரில் புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

Published On 2023-06-01 15:53 IST   |   Update On 2023-06-01 15:53:00 IST
  • உறுதி மொழி ஏற்ப்பு நிகழ்ச்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
  • சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பாப்பிரெட்டிப்பட்டி,

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையின் சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்ப்பு நிகழ்ச்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் நடைபெற்றது.

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News