உள்ளூர் செய்திகள்
பாதுகாப்பான முறையில் கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறதா? உதவி கலெக்டர் ஆய்வு
- சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
- அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.