உள்ளூர் செய்திகள்
மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது
- மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகதாசின் மனைவி அமுதா(வயது 45), உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபு(39), மணகெதி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் கோபி(42), பருக்கல் கிராமத்தை சேர்ந்த சின்னையனின் மனைவி பொன்னம்மாள்(60) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 48 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.