உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்
- அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயங்கொண்டம்:
எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக அங்கீகரித்ததை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சை, நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கல்யாண சுந்தரம், விக்ரம பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு வரவேற்பு கோஷங்கள் எழுப்பியவாறு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.