உள்ளூர் செய்திகள்

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

Published On 2023-08-02 09:35 IST   |   Update On 2023-08-02 09:35:00 IST
  • அரியலூரில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது
  • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அரியலூர்,

அரியலூர் பேருந்து நிலையம் அரசு கலைக் கல்லூரி புதிய வழித் தடத்தில் பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன.பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்த பேருந்து சேவையினை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு காலை கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் மதியம் கல்லூரி முடிவடையும் நேரங்களில் 6 நகரப் பேருந்துகள் மூலம் தினசரி 12 நடைகள் கூடுதலாக இயக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் கூடுதலாக நகரப் பேருந்து வசதியினை பெறுகின்றனர். . இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், திருச்சி மண்டல பொது மேலாளர் எஸ்.சக்திவேல், அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் ஜோ.டொமினிக் அமல்ராஜ், அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News