பத்ம விருது பெறும் தமிழர்களுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
- 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது. மகிழ்ச்சிக்குரியது.
- அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ்சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் சிறந்து விளங்கிய நல்லிக்குப்புசாமி செட்டியார், கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித் குமார், அவர்களுக்கும் மற்றும் நடனக் கலைஞர் ஷோபனா சந்திரகுமார் பத்ம பூஷண் விருதும், இலக்கியம்-கல்வி இதழியல் துறையில் சிறந்து விளங்கிய தினமலர் லட்சுமிபதி ராமசுப்பையர், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரான அஸ்வின் அவர்களுக்கும், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் அவர்களுக்கும் மற்றும் சமையல் கலை வல்லுனர் தாமோதரன் அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது என தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது. மகிழ்ச்சிக்குரியது.
அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ்சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.