உள்ளூர் செய்திகள்

விவசாய விளைபொருளுக்கு உரிய ஆதார விலை வழங்க கோரி: விவசாயிகள் டிராக்டர் பேரணி

Published On 2025-01-26 12:31 IST   |   Update On 2025-01-26 12:31:00 IST
  • அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களின் பேரணி.
  • விவசாயிகள் டிராக்டரை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மண்ணச்ச நல்லூர்:

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநில விவசாய சங்க தலைவர் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்

அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் இன்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களின் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட டிராக்டர் பேரணி நடைபெற்றது.

பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய ஆதார விலையை நிர்ணயித்து சட்டமாக இயற்ற வேண்டும், மின் திருத்த சட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்,

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி புறப்பட்டது.

இதில் தேசிய தென்னி ந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர்களுடன் பங்கேற்றனர்.

சிறிது தூரம் சென்றதும் பேரணிக்கு அனுமதி இல்லை என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் டிராக்டரை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News