- அரியலூரில் குழந்தைகள் தின நடை பயண பேரணி நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடி ய சைத்து தொடங்கி வைத்தார்.இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகத்தில் தொடங்கி அரசினர் தொழிற்பயிற்சி மையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் முடிவ டைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பரி சுகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் ராம கிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன், சமூக நல அலுவலர் பூங்குழலி, தாசில்தார் (அரியலூர்) ஆனந்தவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.