உள்ளூர் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம பறித்தவர் கைது
- கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
- ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் உடையார்பாளையம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி, ரவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து உடையாளர் பாளையம் போலீஸ் நிலையத்தில் ரவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுகாம்பூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.