- பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்
- சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் (வயது 47) என்பவர், இரவு நேரத்தில் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வழியில் இருட்டாக இருந்த பகுதியில் தெருவில் கிடந்த பாம்பை மிதித்து உள்ளார். இதனால் சிவக்குமாரின் காலை பாம்பு கடித்து உள்ளது. இது குறித்து சிவக்குமார் தனது மனைவி உஷாவிடம் கூறவே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், சிவக்குமார் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சிவகுமாரின் மனைவி உஷா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.