உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
- அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- டிக்கெட் கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ஆண்டிமடம் விளந்தையை சேர்ந்தவர் ஸ்டாலின்(வயது 42). அரசு பஸ் கண்டக்டரான இவர் நேற்று ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி உடையார்பாளையம் வழியாக சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த கலியபெருமாள்(35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் இருந்ததாகவும், அவரிடம் கண்டக்டர் ஸ்டாலின் டிக்கெட் கேட்டபோது கலியபெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஸ்டாலின் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கலியபெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்."